அகம் அமர் !

வந்த இடம் சொந்தம் என்று
வருங்காலத்தை அடகு வைத்து
வருவதை நித்தம் தவிர்த்து
வழி தெரியா வாசல் தேடி அலைந்து
வந்த வினை சுடர் பட்டு எரிந்து
வாராதிருக்கும் வழி தேடி திரிந்து
வரும் வினை யாவும் களைந்து
வழித்துணையானது விழித்துணையானது
வந்த வழி ஏகும் வழிதனைக் காட்டியது
வந்து அகம் அமர உள்ளொளியாய் பெருகியது !

You Might Also Like

Leave a Reply