ஒரு வரி உண்மை !

உன் மனம் அறிந்தால் மார்க்கமும் அறிவாய் !

ஒன்றுமில்லாததற்கு ஓராயிரம் முறை முயல்கிறாய் !

தீராத ஒன்றுக்கு தீர்வு காண முயலாதே !

தேர்ந்தெடுக்காததால் தெளிவாகிப் போனேன் !

இழந்தப் பின்தான் இருந்ததின் மதிப்பு புரிகிறது !

தானாய் தோன்றுவதை தற்செயலாய் எழுதி வைத்தேன் !

முத்தெடுக்க மூழ்கி முத்தாகிப் போனதென்ன மாயமோ ?

பொறுமையாக இருக்க அவசரப்பட்டேன் !

அகம் மலர்ந்தப் பின் முகம் மூடி எதற்கு ?

அழுகையை விடுத்தேன் அமுதசுரபியாகிப் போனேன் !

You Might Also Like

Leave a Reply