முடிவே தொடக்கமாய் !

அருமையான வாழ்க்கைத் துணை அருகிருந்தும்
அருமை மறந்து அலைந்து திரிந்து
அல்லல் பல பட்டு பின் அருமை உணர்ந்து
அருகாமையில் வந்து அழகாய் அமர்ந்ததே!

அமர வாழ்வு அடைய ஆசைப்படுவோர் பலர்
அமர்ந்து தவம் இயற்றவோ இயலவில்லை
தவமாகிப் போனப்பின் தவம் என்பது தனித்தில்லை
தவயோகி தானாகி தான் அவனாகி நின்றானே!

நின்ற தனிப்பெரும் பொருளை தழுவி நின்று
அன்ற பொழுதிலே அழகாய் அருகமர்ந்து
என்ற பொழுதிலே எழுதும் எழுத்தறிவித்து
நின்ற பெருமானே நின் கழல் சரணே!

சரண் நீயே! சரண் நீயே! என
சரணடைந்து விட்டேன் இறைவா!
சரண் என வந்த என்னை
அரண் என காத்த அழகா!

அழகாய் மலர்ந்திருந்தாய் அவனியிலே,
ஆராதிப்பார் அனேகருண்டு அவன் இயலே!
அவசரகதியில் இயங்கும் இந்த உலகினிலே,
அவசியமான அனைத்தையும் அள்ளித் தருபவனே!

You Might Also Like

Leave a Reply