இரு வரியில் ஒரு கவிதை!

ஆளுகின்ற அழகை பார்த்தவன்
அற்பத்தில் நாட்டம் கொள்ளான்!

தன்னுள் பொருள் கண்டார்
தன்னைச் சுற்றி இயக்கம் கொண்டார்!

உள்ளிருப்பது நலமானால்
புறமிருப்பது வளமாகும்!

கேட்பது நின்று போனது
குறைவிலாது நிறைந்தது!

நான் என்பது நாமானப்பின்
நைந்தது நவீனமானதே!

நிலம் தயாராகும் வரை
விதை தூவப்படுவது இல்லை!

வாங்கி வந்த வரம்
வேண்டாம் என்றால் விடுவதில்லை!

மாற்றத்தில் மாறாது நின்றப் பின்
மாற்றான் தொல்லை தொலைந்ததுவே!

கொண்டது கொண்டு போக
விண்டது விண் தொட்டதே!

நான், நீ, முழுமை
ஒன்றன்றி வேறில்லை!

You Might Also Like

Leave a Reply