முடிவிலோர் ஆரம்பம் !
முடிவில்லா மாயையின்
முடிச்சவிழ்க்க முயன்று
முடியாமல் போனப்பின்
முடிந்துப் போனேனே.
எனதென்று ஏதுமில்லா
ஏகப் பரவெளிச் சேர
ஏங்கிய ஏக்கம் ஏராக
எனதென்று ஒன்றுமில்லா
ஏகப் பரவெளியாகிப் போனேனே.
போனதும் வந்ததும்
புகலிடம் ஏதுமில்லா தன்மையில்
தன்மை திரிந்து
தரம் கெட்டு போனப்பின்
தராதரம் அறிந்து
பராபரம் சேர்ந்தேனே.
சேர்ந்தது பிரிந்தது
சேருமிடம் ஒன்றுமில்லை என்றானது,
பிரிந்தது சேர்ந்தது
பிறவாமை பெற்றது!
Leave a Reply