நன்று! நன்று!

முழுமை அடையும் வரை
மூடி இருத்தல் நன்று !

நன்றெனக் கண்டதை
இன்றே செய்தல் நன்று !

தொட்டது சுட்டப் பின்
தொடாதிருத்தல் நன்று !

விட்டது நன்றெனத் தெரிந்தப் பின்
விடாதிருத்தல் நன்று !

கைக்கெட்டியது கைநழுவிப் போனப் பின்
கவலை படாதிருத்தல் நன்று !

உண்மை உணர்ந்தப் பின்
ஊருக்கு உபதேசித்தல் நன்று !

You Might Also Like

Leave a Reply