வேண்டுவது என்ன ?

வெயில் காய்ந்தால்
வியர்க்கிறதே என்று
அலுத்துக் கொள்கிறாய்.
மழை பெய்தால்
துணி உலரவில்லை என்று
கவலைப் படுகிறாய்.
குளிர் அடித்தாலோ
படுக்கையை விட்டு எழ
முடியவில்லை என்கிறாய்.
காற்று வீசினாலோ
கதவுகளை அடைத்துக் கொள்கிறாய்.
உண்மையில்
என்னதான் வேண்டும் உனக்கு?

You Might Also Like

Leave a Reply