வழித்துணை

எங்கும் நிறைந்துள்ள அருட்பேராற்றல்
உன்னுள்ளும் உறைந்து நிற்பதை
அறிவாய் மனமே !
எங்கு நீ சென்றிடினும்
துணையும் அதுவே, வழியும் அதுவே
பயணமும் அதுவே, பயணியும் அதுவே
எங்கெங்கும் , எல்லாவற்றிலும்
மறைப்பொருளாய் உள்ள
அருட்பேராற்றல்
தானே முன்வந்து
தன்னை உணர்த்தும் !
பொறுப்பாய் மனமே
அதனால் நிறைவுறுவாய் அக்கணமே !

You Might Also Like

Leave a Reply