தன்னை அறி !

துன்பத்தில் தனி
இன்பத்தில் கூட்டு
இன்ப துன்ப கூட்டு உடைய
பேரின்ப பூட்டு தானாய் திறந்ததே !

திறந்திருக்கும் வாசல்
நுழைய மறுத்து
மூடியிருக்கும் வாசல்
முட்டி தவிக்கின்றார்.

தவிப்போர் தன் பசி தீர
தாரக மந்திரம் நவில்கின்றேன்
தன்னை அறி என்பதே அது
தரணி ஆள்வான் வாக்கே அது !

அது இது என்று
அங்குமிங்கும் ஓடி
அலையும் வீணர்காள் , வீணே வேறெங்கும்
அலைய வேண்டாம் அடி மனதில்
அமைதியாய் நிலைக்கும் அறிவை நீ
அடைந்து விட்டால் , பின் அலைவதேது
அமைதியில் உறைந்து பின் நிறைவாய் !

You Might Also Like

Leave a Reply