சேராமல் சேர்ந்தேன் !

பற்றிப் பிடித்ததினால்
பட்டப் பாடென்ன ?
பகலிலும் இருளானேன்.
பார் அத்தனையும் சேர்த்தாலும்
பாத்திரத்தில் அடங்குமோ ?
அடங்காப் பிசாசை
அடக்கியே தீருவேன் என்று
கங்கணம் கட்டினேன்.

கட்டிய கோட்டை எல்லாம்
நொறுங்கியது
கண்ட கனவெல்லாம் கலைந்தது
வெந்தழல் தீயில்
வெந்து மாண்டேன்

சேரும் இடம் ஒன்றும் இல்லை
என்று சிந்தைத் தெளிந்தே
சேராதிருப்பதே சேர்ந்ததாகும்
என்று சேராமல் சேர்ந்தேன் !

You Might Also Like

Leave a Reply