ஸ்ரீ ஆதிபராசக்தி

அண்ட சராசரத்தை ஆள்பவள்
அன்புக்கு கட்டுப்பட்டவள்
அழைத்ததும் ஓடோடி வந்து
அணைத்துக் கொண்டனள் என்னை
அழுத என்னை அமுதசுரபியாக்கினாள்
வேதனைகள் யாவையும்
வெந்தீயில் மாய்த்தாள் !
மாயனது தங்கை அவள்
மகிமையது உரைத்திடல் இயலுமோ ?
தனித்திருந்தேன் துணையானாள்
புதைந்தேன் புத்தொளி தந்தாள்
மகிஷனை வென்றவள் இவள்
மனதையும் வென்றாள் !
கவிபாடும் புலமையில்லை எனக்கு
அந்த கள்ளமில்லா மனத்தாளை !

You Might Also Like

Leave a Reply