நிறைந்தவன் சூன்யத்தில் !

எங்கும் , எதிலும்
இருமையின் இடையறாதப் போராட்டம்
ஒருமையை நோக்கி .

மௌனத்தை நோக்கி
ஓசைகளின் ஊடே ,

ஆனந்தத்தை நோக்கி
அழுகையின் ஊடே ,

சூன்யத்தை நோக்கி
உருவத்தின் ஊடே ,

நித்ய சுத்த வெட்டவெளி
மேக கூட்டங்களின் ஊடே ,

உணர்ந்தவன் , நிறைந்தவன்
சூன்யத்தில் .

பரிபூர்ணனுக்கே அர்ப்பணம் .

You Might Also Like

Leave a Reply