பிரவாகம்
மௌனத்தில் நிற்பானிடம் பேச
மொழிகள் பல கற்றேன்
மொழி மறந்து மௌனியானப்பின்
மௌனத்தில் கரைந்தேனே !
கரை புரண்டு ஓடும் கண்ணீர்
கரம் ஏதுமில்லை துடைக்க
கறை ஏதுமில்லா புனிதநீர்
கங்கை என பிரவாகமாகியதே !
பிரவாகம் தொடங்கியதும்
பிதற்றல் முடிவுற்றது !
முடிவு அற்று நிற்பானை
முடிந்து கொள்ள முயற்சி செய்து
முடியாமல் போனப்பின்
முடிந்து போனது நான் !
Leave a Reply