ஒரு துளி ஒருமை !

ஒரு கோப்பை தேநீர்
ஒரு மனதாகி பருகவில்லை
ஓராயிரம் சிந்தனைகள் ஊடே
ஒருவாறு காலியானது
ஒரு துளி மிச்சமிருக்க
ஒருமையுள் வந்து அமர
ஒரு மனதாகி சுவைத்தது !

You Might Also Like

Leave a Reply