இதயக் கமலம் !
பூசலார் பண்ணிய பூசையது
புரிந்திடவோ மனமதில் ஆசையது
பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனது
புரிந்திடவே முயன்றேன் பூசையது
புரையோடிய புண்களின் ரணமது
புரியவிடாமல் தடை செய்தது
புரிந்துணர்வு அகத்துள் வழிக்காட்டியது
புரியாத புதிர்களின் விடையை கண்டுற்றது
பூரித்திடும் தவக்கனலை மேலேற்றியது
புனர்ஜென்மம் தவிர்த்து பூரணத்தில் கரைந்தது !
Leave a Reply