அன்பின் அருள் !
அரண்டு நின்று அரற்றிய என்னை
அன்பால் அள்ளி அணைத்த தாயே !
அரவணைத்த அன்னையினை மறந்து
அகிலம் முழுதும் சுற்றித் திரிந்தேன்
அம்மா… எனும் என் அழுக்குரல் கேட்டு
அகிலத்து நாயகியே ! அன்னையே !
அள்ளி அணைத்தாய் என்னையே !
அன்பின் முகம் ஏறெடுத்தும் பாராமல்
அகந்தை கொண்ட என் மனதை
அன்பினால் கட்டிக் கொண்ட அருளே !
அகந்தைக்கும் அருள் செய்த அன்பே !
அகிலமே கிடைத்தாலும் வேண்டேன்
அன்னையின் திருவருள் துணை நிற்க
அகிலாண்ட கோடிகள் யாவும்
அகத்திலே ஆனந்த நர்த்தனமிட
அகந்தை யாவும் தொலைந்ததே
அன்பின் அருள் அகத்தில் நிறைந்ததே !
Leave a Reply