அன்பு !
அன்பானவரை
அல்லல் படுத்துவதா அன்பு?
அருகிருப்பவரை
அலட்சியப் படுத்துவதா அன்பு?
அன்பை தொலைத்தாய்
ஆண்டவனை அழைத்தாய்
அன்பே ஆண்டவன் என
அகத்துள் காண மறுத்தாய்
அன்பை வெளியில் தேடினால்
அல்லல் படுவாய்
அலைக்கழிக்கப் படுவாய்
அன்பே நீ என
அகத்துள் உணர்ந்தால்
அமைதி அடைவாய்
ஆனந்தம் பெறுவாய் !
Leave a Reply