வாழ்க்கை ஒரு வாய்ப்பு !
வாழ்க்கை ஒரு வாய்ப்பு
அதை வரமாக நினைப்பதும்
அன்றி சாபமாக நினைப்பதும்
அவரவர் மனோ நிலையே !
வாழ்க்கை ஒரு வாய்ப்பு
தேடி தெளிவதும் அன்றி
தேடாமல் தேங்குவதும்
அவரவர் விருப்பமே !
வாழ்க்கை ஒரு வாய்ப்பு
வரமாக மாற்றியவன்
வரமாகிப் போகிறான்!
வந்ததைப் பழித்தவன்
வருவதை இழக்கிறான்
வருந்தி உழல்கிறான் !
Leave a Reply