எங்கும் நிறைந்த நாயகியே !
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து
அருள் வழங்கும் சக்திதேவி!
சூட்சும நாயகி! மாயா சொரூபினி!
இச்சீவன் கடைத்தேற
கருணைப் புரியும் கற்பூர நாயகி!
ஒன்று பலவாகி, உருவமாகி, அருவமாகி
ஆழ்ந்து வேராகி, பரந்து விரிந்து,
சிந்தைக்கு அகப்படாததாய்,
அணுவுக்குள் அணுவாய் நிறைந்து,
நுண்ணிய பேரொளியாய், அறிவாய்
அன்பாய், கருணையாய், உணர்வாய்
எங்கும் நிறைந்திட்ட நாயகியே!
நின் பதம் போற்றி! போற்றி! போற்றி!
Leave a Reply