பழுத்த பழம் !
பாசமென்று நினைத்தவர்கள்
பார்வையாலே கூறுபோட
பரிதவித்தேன் நூலறுந்த பட்டம் போல
பாசவினையின் முடிச்சவிழ்ந்து
பட்டப்பாடுகள் யாவும் தொலைந்து
பாசக் கயிற்றில் இருந்து விடுபட்டு
பகல் கனவுகள் யாவும் கலைந்து
பட்ட மரம் மீண்டும் துளிர்த்து
பழுத்த பழமாகி பரமனடிச் சேர்ந்தேனே !
Leave a Reply