தலை மயில் !
தட்டி தட்டியே தரையில் வைத்தார்
தாண்ட விடுவேனா பார் என்றார்
தவித்த வாய்க்கு நீர் இல்லை என்றார்
தாங்கொணா துயரது
தகிக்கும் தணலாய் வாட்ட
தரை மீது தவித்து நின்றேன்
தன்னை மறந்தேன்
தவழ்ந்து கிடந்தேன்
தரணி ஆள்பவள்
தன்னெழில் பொருந்திட வந்தாள்
தாயாகி அணைத்தாள்
தயவுடனே காத்தாள்
தன் உணர்வு தந்தாள்
தன்னைத் தான் ஆளும்
தந்திரம் அதை அருளினாள்
தகிக்கும் தணல் புனலாக மாற
தலைமையில் கொண்டு சேர்த்தாள் !
Leave a Reply