கனலின் அனல் !
கண்டதின் கறை காணாமல் போக
கருத்துள் வாங்கியது
கண்டம் விட்டு மறைய
காண்பதெல்லாம் கனவென
காலம் ஒரு நாள் உணர்த்த
கைக்குழந்தை ஆனேன்
காலத்தின் மடியில்
கைப்பிடித்தே கரை சேர்த்தான்
கால வெள்ளத்தில் மீட்டெடுத்தான்
காம கசடுகள் யாவும் களைந்தான்
கனல் மூட்டி கருத்தினில் நிறைந்தான் !
Leave a Reply