அனலின் புனல் !

அஸ்திவாரம் இன்றி அலைந்தேன்
அனலின் நாயகன் அருள் துணை நிற்க
அண்டவெளிப் பயணம் மேற்கொண்டேன்
அடிப்படை இன்றி அனாதிக்கு ஆசைப்பட்டேன்
அனலின் நாயகன் தண்புனலாய் தயவுடன் வந்தான்
அணைக்கட்டிய தடுப்புகளை தகர்த்தெறிந்தான்
அமுத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச்செய்தான்
அனந்தத்தில் எனை ஆழ்த்தி புது ஆனந்தம் தந்தான்
அனலாக எழுந்தவன் அக்னிப் புனலாக மாறினான்
அள்ளி அணைத்தே கவி பாடும் புலமை தந்தான் !

You Might Also Like

Leave a Reply