அனந்தம் ஆனந்தம் !

அன்னியர் கோட்டை
ஆடம்பர அரண்மனை
அறுசுவை விருந்து
ஆயிரம் வசதிகள்
அணிவகுத்து நின்றாலும்
அமைதியது நிறைக்கவில்லை
அலைக்கடல் வாழ்க்கை விடுத்து
ஆழ்ந்துப் போனவன்
அமிர்தத்தை உண்டான்
ஆனந்தம் அடைந்தான்
அனந்தம் கண்டான் !

You Might Also Like

Leave a Reply