குழலோசை !
கனவுகள் பல பல
கண் முன்னே விரிய
கண்டதை கைக்கொள்ள
கள் மனமும் துணிய
கைக்கு எட்டா தூரத்தில்
கனவுகள் சென்று மறைய
கள் மனம் வெதும்பி சாக
கண்ணனின் குழலோசை
காதுகளில் ரீங்காரமிட
கனவுகள் மறைந்தது
காரிருள் நீங்கியது
கவலைகள் தீர்ந்தது
கண்களின் கங்கை நீர்
கண்ணனை சேர்ந்தது !
Leave a Reply