பரமனடி சேர் !

பல எண்ணம் பல வண்ணம்
பாரோர் புகழும் ஏக்கம் மிக
பார்த்து பார்த்தே காலம் கழித்தே
பாழாய் போனதே இந்த மனது.
பழிச் சொல்லில் திணறி நிற்க
பார் புகழும் ஏக்கமும் மாய்ந்து போக
படியேறா மாந்தர்கள் விடுத்து
படி ஏறி பரமனடி சேர்ந்தேனே !

You Might Also Like

Leave a Reply