ஒரு வரி உண்மை !
குறைவற்ற செல்வம்
குழந்தையின் குதூகலம்!
உதிர மறுப்பவை
மீண்டும் துளிர்ப்பதில்லை.
வாள் பேசாததை எல்லாம்
சொல் பேசும்!
இரைச்சலின் முடிவு
இசையின் ஆரம்பம்.
மணத்தை தேடுகிறாய்
இன்னும் மலராமலேயே.
வெறும் ஓடல்ல
கருவைக் காக்கும் கூடு.
மௌனத்துள் வாழ்பவன்
சொற்களை வென்றவன்!
தானே எழுதுவதை
நான் என்று எண்ணாதே.
தொட்டால் சுடும் என்று
தெரிந்தே தொடுகிறாய்.
செயலே சொல்லானது
சாதனையாளருக்கு!
Leave a Reply