இரு வரியில் ஒரு கவிதை !
காத்திருத்தல் இனி இல்லை
கடந்து போவது மட்டுமே !
முழுவதும் ஏற்றுக் கொள்வதில் தான்
முழுமையின் தரிசனம் கிட்டுகிறது !
அருகிருந்தும் அருமை மறந்தவன்
அழுதென்ன இலாபம் ?
வலிகளும் வேதனைகளும்
வாழ்க்கையின் விளக்காகின்றன !
நல்லதை செய்யும் ஒவ்வொரு நேரமும்
உனக்கு நல்ல நேரமே !
அறிந்த அனைத்தையும் துறந்தேன்
அறியாத உண்மையை உணர்ந்தேன் !
இல்லாத ஒன்றிற்காகப் போராடினேன்
இருப்பதோ இருக்கிறது நிர்சலனமாய் !
வாழ்வென நினைத்து மரணத்தில் வீழ்ந்தேன்
மரணமென நினைத்து வாழ்வில் மலர்ந்தேன் !
பரவெளியில் பற்றுக்கோடுகள் ஏதுமில்லை
கால இடைவெளியில் கடவுளைக் காண்கிறேன் !
மனிதனை புனிதனாகு என்கிறார்கள்
மனிதன் முதலில் மனிதனாக இருக்கட்டும் !
Leave a Reply