இரு வரியில் ஒரு கவிதை !
அருட்பெரும் சோதியிடம் கேட்டேன்
கற்பூர உடல் வேண்டும் என்று !
கற்பூரமாய் சோதியில் கலந்துப்போக
கறையேதும் இல்லை இங்கு !
ஆழ்ந்துப் போனவனே அழகாகிப் போகிறான்
சலனமற்றவனே சாரதியாகிறான் !
தயவினை எதிர்பார்த்தே தனித்து நிற்கும்
துணிவினை இழந்தாய் !
தனக்குத் தானே ஆட முடியாததால்
அடுத்தவர்க்கு ஆடுகிறான் !
கைவிட்டு விட்டாய் என்கிறாய்
சுமந்து கொண்டிருப்பவனைப் பார்த்து !
தெளிவான நீர் வேண்டும் என்கிறாய்
குளத்தில் கல்லெறிந்துக் கொண்டே !
தனித்தப் புள்ளிகள் ஒன்று சேர்ந்ததும்
அழகிய கோலமானது !
ஒற்றை ஆடையும் நிர்மூலமானதும்
நிர்வாணமாய் நின்றேனே !
உண்மை பிரகாசிக்கும் போது
உறக்கம் விழித்தேன் !
Leave a Reply