அன்பிற்கு அணையேது ?
அன்னையின் அன்பிற்கு அணையேது ?
அன்னையின் அருளுக்கு நிகரேது ?
அழுதவுடன் அணைத்திடுவாள்
அமுதத்தை ஊட்டிடுவாள் !
பரிதவிக்க பொறுக்கமாட்டாள்
பாரினில் சிறக்கச் செய்வாள் !
பசிப்பிணி போக்கிடுவாள்
பஞ்சம் அதை நீக்கிடுவாள் !
பாதை மாறி சென்றாலும்
பார்த்து , பார்த்து வழி சொல்லிடுவாள் !
பாரி வள்ளலாய் அருள் சுரப்பாள்
பாரினில் உள்ளோர் வாழ்த்திடவே !
Leave a Reply