காரைக்காலம்மையார்

அன்பு உருக்கொண்டதால்
என்புருவானவள்
கருணையே வடிவெடுத்த
காரைக்கால் அம்மை !
அந்த அம்மை எம்மையும் காப்பாள்
வழி போதித்து அருளுவாள்
அப்பனிடம் கொண்டும் சேர்ப்பாள் !
கால் தடம் பதியா காரைக்காலம்மை
கண்மூடித் தொழுதால்
கணநேரத்தில் வருவாள்
கலங்கிய நெஞ்சில்
களிநடனம் புரிவாள் !
காரிருளைக் களைவாள்
கவலையும் போக்குவாள் !
திவ்விய ஜோதியில்
தெள்ளிய ஜோதியாய் கலந்தவள் !
எனையும் பணித்தனள்
ஜோதி உட்புகுமாறே !

You Might Also Like

Leave a Reply