பூரணப் பொலிவு (The absolute brightness)
1
என்னதான் நான் வேருக்கு
நீர் பாய்ச்சினாலும்,
ஒரு மழை வந்து நனைத்ததும் தான்
பூரணப் பொலிவுடன் சிரிக்கின்றன
ஒவ்வொரு செடியும்.
Though I water to the root of the plant,
every plant brighten up with a smile,
only when it rains.
2
ஒரு சிறுதுளி மழைக்கு பயந்து
உள்ளே நான் ஓடி ஒளிய,
பெருமழை பெய்தும் பேருவகையில்
சிரிக்கின்றன சிறுதளிர்கள் யாவும்.
I ran inside fearing
for a rain drop drizzle.
But even in the heavy rain I saw,
the little seedlings smiling cheerfully.
Leave a Reply