முடியா முடிச்சு !
மூட்டையின் பாரம் அது தாங்கவில்லை
மூட்டையின் முடிச்சவிழ்க்க முயன்றேன்
மூச்சு முட்டியதுதான் மிச்சம்
மூட்டையில் நிறைந்திருந்த எச்சம்
மூட்டைப்பூச்சி கணக்காய் குருதியை உறிய
மூட்டையது எரிதணலில் வெந்து எரிய
மூட்டையது சாம்பலாய் பூத்து நிற்க
முடிச்சுகள் அவிழ்ந்தது
மூட்டையும் மறைந்தது !
Leave a Reply